டெல்லியில் ஆட்-ஈவன் முறையில் கடைகளுக்கு அனுமதி: ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் !

ஊரடங்கு தளர்வு

மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அரசு அலுவலகங்களில் குருப் A ஊழியர்கள் 100 சதவிகிதத்துடனும், குருப் B ஊழியர்கள் 50 சதவிகிதத்துடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது

  • Share this:
டெல்லியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவில் இரண்டாவது அலையால் கடும் பாதிப்பை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முக்கியமானவை ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில் பரவத் தொடங்கிய கொரோனா கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இரண்டு மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு சராசரியாக 50 ஆயிரத்தை கடந்து பதிவாகியது. பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையடுத்து ஊரடங்கு உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. டெல்லியில் ஏப்ரல் 19ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்னர் பலமுறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போதைய ஊரடங்கு ஜூன் 7ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பரவல் சற்று குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழாக சரிந்துள்ளது. டெல்லியிலும் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அரசு அலுவலகங்களில் குருப் A ஊழியர்கள் 100 சதவிகிதத்துடனும், குருப் B ஊழியர்கள் 50 சதவிகிதத்துடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத  ஊழியர்களுடன் செயல்படலாம். கொரோனா கட்டுப்பாடு பகுதிகள் நீங்கலாக பிற பகுதிகளிலுள்ள மால்கள், சந்தைகள் ஒற்றை, இரட்டை எண்கள் முறைப்படி (ஒரு கடை விட்டு ஒரு கடை) இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைந்தால் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதேபோல், கொரோனா 3வது அலை தாக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளதால், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 3வது அலையின்போது  தினசரி பாதிப்பு அதிகப்பட்சமாக 37 ஆயிரத்தை தொடும் என்றும் அதனை கணக்கில்கொண்டு தயாராகி வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: