Home /News /national /

அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில் ரயில் நிலைய கடையை சூறையாடிய கும்பல் - வைரல் வீடியோ

அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில் ரயில் நிலைய கடையை சூறையாடிய கும்பல் - வைரல் வீடியோ

கடையில் கொள்ளையடிக்கும் போராட்டக்காரர்கள்

கடையில் கொள்ளையடிக்கும் போராட்டக்காரர்கள்

அக்னிபத் போராட்டத்தின் போது ஏற்பட்ட இந்த திருட்டு சம்பவத்தின் காரணமாக ரூ.20,000 மதிப்புள்ள பொருள்களும், ரூ.8,000 மதிப்பிலான பணம் இழந்துள்ளதாக கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாகக் காணப்படுகின்றன. பீகார் மாநிலத்தில் மட்டும் இந்த போராட்டம் தொடர்பாக 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டு ரயில்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மேலும், அம்மாநிலத்தின் 17 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்த கடை ஒன்றை சூறையாடி திருட்டில் ஈடுபடும் அதிர்ச்சிக்குரிய காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஆரா ரயில் நிலையத்தில்(Ara Railway Junction) உள்ள கடையில் சிப்ஸ், பிஸ்கட், குளிர்பானங்கள் போன்றவற்றை திருடிச் செல்லும் போராட்டக்காரர்கள், அங்கிருந்த தண்ணீர் தரும் இயந்திரத்தையும் உடைத்து சூறையாடியுள்ளனர். இந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.


    அக்னிபத் போராட்டின் போது ஏற்பட்ட இந்த திருட்டு சம்பவத்தின் காரணமாக ரூ.20,000 மதிப்புள்ள பொருள்களும், ரூ.8,000 மதிப்பிலான பணம் இழந்துள்ளதாக கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அக்னிபத் குறித்த வதந்திகளை பரப்பியதால் 35 வாட்ஸ்அப் குழுக்களுக்குத் தடை!

    இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக போலி செய்திகளைப் பரப்பி போராட்டத்தை ஊக்குவித்த குற்றத்திற்காக 35 வாட்ஸ் ஆப் குழுக்களை அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.  அத்துடன், பதற்றமான இடங்களில் சமூக வலைத்தளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Agnipath, Bihar, Protest, Viral Video

    அடுத்த செய்தி