மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ரூ.1 கோடி லஞ்சம் கேட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனை

ஸ்மிருதி இராணி

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக சர்வதேச துப்பாக்கிச் சூடும் வீராங்கனை வர்திகா சிங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 • Share this:
  சர்வேதச துப்பாக்கிச் சூடும் வீராங்கனையாக இருப்பவராக வர்திகா சிங். அவர் மீது அவருடைய நண்பர் ஒருவர் மீதும் நவம்பர் 23-ம் தேதி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உதவியாளர் விஜய் குப்தா என்பவர் அமேதி மாவட்டத்திலுள்ள முசாஃபிர்கானா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘வர்த்திகா சிங்கும் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்’ என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதனையடுத்து, வர்த்திகா சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதனையடுத்து, வர்திகா சிங், உத்தரப் பிரதேசத்திலுள்ள சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

  அந்த வழக்கில், ‘மத்திய அமைச்சர் ஸ்மிருதியின் உதவியாளர் விஜய் குப்தா, மருத்துவர் ரஜ்னீஷ் ஆகியோர் மத்திய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டனர். பின்னர், 25 லட்ச ரூபாயாக குறைத்துக்கொண்டனர். பின்னர், போலி நியமனக் கடிதம் ஒன்றையும் கொடுத்தனர். அதில், ஒருவர் என்னிடம் ஆபாசமாக பேசினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சரின் சட்ட ஆலோசகர் கிராத் நக்ரா, ‘இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது. அரசியல் பின்னணி உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: