கேரி பேக் தர ரூ.3 கேட்ட பேட்டா நிறுவனம்... ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

கூடுதலாக, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட செலவுகளைத் திருப்பி அளிக்குமாறும் பேட்டா ஷூ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

கேரி பேக் தர ரூ.3 கேட்ட பேட்டா நிறுவனம்... ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்!
பேட்டா(Image: REUTERS/
  • News18
  • Last Updated: April 15, 2019, 12:36 PM IST
  • Share this:
கடைகளில் பொருட்கள் வாங்கிய பின் கூடுதலாக கேரி பேக் வேண்டுமென்றால் கூடுதல் பணம் வாங்கப்பட்டு வருகிறது. இப்படி காகித கேரி பேக் தர மூன்று ரூபாய் கூடுதலாகக் கேட்ட பேட்டா ஷூ நிறுவனம் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த வழக்கின் பெயரில் பேட்டா-வுக்கு 9 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் பேட்டா ஷூ கடையில் ஷு வாங்கிய பின்னர் கேரி பேக்-காக 3 ரூபாய் அதிகம் தர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு கடையின் பொருளை வாங்கிய பின்னர் அதை எடுத்துச்செல்ல அந்தக் கடையினர்தான் கேரி பேக் தர வேண்டும் என்று கூறியவர் உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.


402 ரூபாய் பில் பணத்துடன் கூடுதலாக 3 ரூபாய் வசூலிக்கப்பட்ட விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த வாடிக்கையாளர் முறையிட்டார்.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பில், “உங்கள் கடையில் பொருள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள்தான் கேரி பேக் தர வேண்டும். சுற்றுச்சூழல் நலன் கருதினால் உங்கள் நிறுவனம் அதற்குத் தகுந்த மாற்று ஏற்பாடுகளை வாடிக்கையாளர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும்” என பேட்டா நிறுவனத்திடம் உத்தரவு பிறப்பித்தது.

கூடுதலாக, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட செலவுகளைத் திருப்பி அளிக்குமாறும் பேட்டா ஷூ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.இதனால், கேரி பேக் செலவு 3 ரூபாய், வழக்குத் தொடுத்த செலவு 1,000 ரூபாய், நஷ்ட ஈடாக 3 ஆயிரம் ரூபாய், அபராதமாக 5 ஆயிரம் ரூபாய் என 9 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டது.

மேலும் பார்க்க: சீமானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்... என்ன பிரச்னை...?

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்