ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருமணம் செய்ய சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொடூரமாக அடித்து உதைத்த வாலிபர் - அதிர்ச்சி வீடியோ

திருமணம் செய்ய சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொடூரமாக அடித்து உதைத்த வாலிபர் - அதிர்ச்சி வீடியோ

காதலியை கொடூரமாக தாக்கிய இளைஞர்

காதலியை கொடூரமாக தாக்கிய இளைஞர்

மத்தியப் பிரதேச காவல்துறை தாமாக முன்வந்து அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இன்று காலை முதலே வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை தரை தள்ளி கொடூரமாக உதைத்தும் அடித்தும் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.

இந்த அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வீடியோவில் இருந்த இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளது. அந்த வாலிபரிடம் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

அதை அந்த இளைஞர் ஏற்க மறுத்த நிலையில், தொடர்ந்து அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பெண்ணை வேகமாக அடிக்கத் தொடங்கினார். நிலை தடுமாறி பெண் கீழே விழுந்து நிலையில், அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கினார்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அதேவேளை, அந்த இளைஞரை யாரும் பிடித்து தடுத்து தட்டி கேட்கவில்லை. பின்னர் அந்த பெண்ணை மீட்ட உள்ளூர் மக்கள் அவருக்கு முதலுதவி தந்துள்ளனர். இந்த அதிர்ச்சி தரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மத்தியப் பிரதேச காவல்துறை தாமாக முன்வந்து அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறது.

First published:

Tags: Attack on girls, Beaten, Madhya pradesh, Viral Video