Home /News /national /

Shocking Video: மலை பாதையில் உஷார்... டர்னிங்கில் நிலைதடுமாறிய ஸ்கூட்டி... காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்...

Shocking Video: மலை பாதையில் உஷார்... டர்னிங்கில் நிலைதடுமாறிய ஸ்கூட்டி... காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்...

அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

மலைச்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் பேருந்து ஒன்று வேகமாக திரும்பி செல்கிறது. அப்போது எதிரே ஸ்கூட்டியில் வந்தவர்கள் நிலைத்தடுமாறி சாலையில் கீழே விழுந்துவிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்த சாலை விபத்து தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. 

    மலைச்சாலைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். மலைச்சாலைகளில் உள்ள ஆபத்தை உணராத சிலர் சாதாரண சாலைகளில் பயணிப்பது போல் மலைகளில் பயணிப்பார்கள். மூடுபனி காரணமாக முன்னாள் செல்லும் வாகனங்கள் சில நேரம் நம் கண்களில் இருந்து மறையலாம். மலைச்சாலைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இதுபோன்ற நேரத்தில் ஏற்படும் சிறிய கவனக்குறைவும் பெரிய விபத்தில் முடியும். இப்படியான ஒரு சம்பவம்தான் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்துள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    Also Read: அரிவாளுடன் ஆட்டம்போட்ட இளைஞர்.. வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய வீடியோ

    இந்தச்சம்பவம் ஹிமாச்சல் பிரதேசம் ஹமிர்பூர் பகுதியில் நடந்துள்ளது. மலைச்சாலையில் உள்ள வளைவு ஒன்றில் பேருந்து ஒன்று வேகமாக திரும்பி செல்கிறது. அப்போது எதிரே ஸ்கூட்டியில் வந்தவர்கள் நிலைத்தடுமாறி சாலையில் கீழே விழுந்துவிட்டனர். இதனைகவனித்த பேருந்து ஓட்டுநர் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். கிழே விழுந்த நபர்கள் மெல்ல எழுந்தனர். அவர்கள் பின்னால் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கிழே விழுந்த நபர்களுக்கு உதவி செய்ய நினைத்து அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். வளைவு சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தும்போது எதிர்பாராத விதமாக பைக்குடன் இருவரும் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்டனர். இணையத்தில் வெளியான இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியடைவைத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bike, Himachal Pradesh, Road accident, Viral Video

    அடுத்த செய்தி