பள்ளி சிறுவனை 20 மாணவர்கள் கொண்ட கும்பல் தாக்கும் அதிர்ச்சி வீடியோ..
பள்ளி சிறுவனை 20 மாணவர்கள் கொண்ட கும்பல் தாக்கும் அதிர்ச்சி வீடியோ..
வைரல் வீடியோ
Kerala | கேரளாவில் பள்ளி வகுப்பறையில் துவங்கிய வாய்த்தகராறு கலவரமாக நடுரோட்டில் முடிந்தது ,ஒரு மாணவனை 20 பேர் கொண்ட மாணவ கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை.
சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் இதுபோன்ற சம்பவங்கள் மிகவிரைவில் அனைவருக்கும் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளா மாநிலத்தில் 1 மாணவரை 20 மாணவர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பட்டம் என்னும் பகுதியில் உள்ள சென்மேரிஸ் பள்ளியில் படிக்கும் 20 மாணவர்களை கொண்ட கும்பல் ஒரு மாணவனை தாக்கும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி வகுப்பறையில் ஏற்பட்ட வாய்த்தகராறு ,நேற்று காலையில் பள்ளிக்கு வருவதற்காக பேருந்திற்காக காத்திருந்த ஒரு மாணவனை 20 பேர் கொண்ட பள்ளி மாணவர் கும்பல் நடுரோட்டில் போட்டு தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 11ஆம் வகுப்பு படிக்கும் டானியல் என்ற மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிய இந்த வீடியோவால் விசாரணை நடத்திய பட்டம் போலீசார் பள்ளி மாணவர்கள் என்பதால் வழக்குபதிவு செய்யாமல் வீடியோவை ஆதாரமாக வைத்து, வீடியோவில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களையும் காவல் நிலையத்தில் நேராக அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.