10வயது மகனுடன் ஆபாச நடனமாடிய தாய்.. இணையத்தில் வைரலான வீடியோ -விசாரணையில் இறங்கிய மகளிர் ஆணையம்

டெல்லி பெண்

வீடியோ விவகாரம் டெல்லி மகளிர் ஆணையத்துக்கு எட்ட இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

  • Share this:
    டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது மகனுடன் ஆபாச நடனமாடிய வீடியோவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. .

    சமூகவலைதளங்களில் வரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களுக்காக சிலர் விசித்திரமான செயல்களை செய்வார்கள். எல்லா இடங்களிலும் சில ரவுடி பேபிக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சில சினிமா நட்சத்திரங்கள், மாடல்கள் கூட தங்களை லைம் லைடில் வைத்துக்கொள்ள தங்களது கவர்ச்சிகரமான, நீச்சல் குளம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கின்றனர். இதுபோன்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அதிக பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

    டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது மகனுடன் ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த டெல்லி மகளிர் ஆணையம் அந்தப் பெண்னின் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    Also Read:  உடல் உறவு வைக்காமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்புதான் - உயர்நீதிமன்றம் உத்தரவு

    டெல்லியை சேர்ந்த அந்தப்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்கிறார்கள். தனது 12 வயது மகனுடன் ஆபாசமாக நடமாடும் வீடியோவை அந்தப்பெண் இணையத்தில் பதிவிட்டுள்ளார். தனது மகனுடன் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வதா என அந்தப்பெண்ணின் செயலை சிலர் திட்டிப்பதிவிட்டதை தொடர்ந்து அவர் தனது பக்கத்தில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கிவிட்டுள்ளார். வீடியோ விவகாரம் டெல்லி மகளிர் ஆணையத்துக்கு எட்ட இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து பேசியுள்ள டெல்லி மகளிர் ஆணையத்தை சேர்ந்தவர்கள், அந்த சிறுவனுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது. பெண்களிடம் ஆபாசமாக இருப்பதை ஊக்குவிப்பது போல் அவரது நடவடிக்கை உள்ளது. அம்மா - மகனின் புனிதமான உறவை இது களங்கப்படுத்துகிறது. இத்தகைய மகன் எதிர்காலத்தில் சிறுமிகளை பற்றி எப்படி நினைப்பான். இது இப்படியே தொடர்ந்தால் சிறுவனனின் மனநிலையே மாறிவிடும். எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி போலீஸூக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்றனர்.

    Also Read: இப்படியும் ஒரு பெண்ணா? கணவரை அம்மா உடன் பகிர்ந்த மகள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

    டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் கூறுகையில், “ கலையை வெளிப்படுத்துவதற்கு சமூகவலைத்தளம் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்கிறது. ஆனால் சிலரோ புகழ் பெற வேண்டும் என்பதால் வெட்கக்கேடான செயல்களை செய்யத் தொடங்குகிறார்கள். 10 வயது சிறுவனுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டிய அவரது தாயே அவனுடன் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை உருவாக்கிறாள். நாங்கள் பெண்கள் ஆணையம்தான் அதற்காக ஒரு தவறான பெண்ணை ஆதரிப்போம் என்று அர்த்தமல்ல.அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: