ஹோம் /நியூஸ் /இந்தியா /

தூக்கு போட முயற்சித்த மனைவி.. தடுக்காமல் கூலாக வீடியோ எடுத்த கணவர் கைது.. உபியில் அதிர்ச்சி

தூக்கு போட முயற்சித்த மனைவி.. தடுக்காமல் கூலாக வீடியோ எடுத்த கணவர் கைது.. உபியில் அதிர்ச்சி

மனைவி தற்கொலை முயற்சியை வீடியோ எடுத்த கணவர் கைது

மனைவி தற்கொலை முயற்சியை வீடியோ எடுத்த கணவர் கைது

குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த மனைவியை தடுக்காமல் அதை கணவன் வீடியோ எடுத்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanpur, India

  உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள குல்மோஹர் விஹார் பகுதியில் வசிப்பவர் சஞ்சீவ் குப்தா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சஞ்சீவ்விற்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் கிஷோர் குப்தா என்பவரின் மகள் ஷோபிதா குப்தா என்பவருடன் திருமணமாகியுள்ளது.

  சஞ்சீவ் ஷோபிதா தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று தம்பதி இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், மனைவி ஷோபிதா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மனைவி இறந்த செய்தியை ஷோபிதாவின் தந்தை ராஜ் குமாரிடம் தெரிவித்த நிலையில், பதறிப்போய் ராஜ் குமார் சஞ்சீவ்வின் வீட்டிற்கு வந்து அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளனர். தனது மகள் ஏன் இந்த முடிவை எடுத்தாள் என அவர்கள் சஞ்சீவ்விடம் கேட்ட போது தான் அவர்களுக்கு கூடுதல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கணவன்.. சேலத்தில் நடந்த பயங்கரம்

  சஞ்சீவ் தனது மொபைல் போனை எடுத்து ஷோபிதா தூக்கு போட ஆரம்பிக்கும் வீடியோவை காட்டியுள்ளார். தங்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் மனைவி கோபத்தில் தூக்குபோட சென்றார். இவ்வாறு நீ செய்தால் அதை வீடியோ எடுத்து உங்கள் வீட்டாருக்கு அனுப்பிவிடுவேன் என்று கணவர் எச்சரித்துள்ளார். இதனால் முதல்முறை  தற்கொலை முயற்சியை கைவிட்ட பெண், பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

  இதையும் படிங்க: ஆதாரம் இல்லாமல் கணவன் மீது பழிப்போடுவதும் கொடுமைதான் - மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  மனைவி தூக்கு போடும் போது அதை தடுத்து பிறரிடம் கூறி கவுன்சிலிங் தராமல், அதை வீடியோ எடுத்த கணவரின் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண் வீட்டார் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், கணவர் சஞ்சீவ்வை கைது செய்து அவரின் செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது. மேலும், உயிரிழந்த ஷோபிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளது.

  தற்கொலை தீர்வல்ல : மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Kannan V
  First published:

  Tags: Husband Wife, Suicide, Suicide attempt, Uttar pradesh