ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாலையில் 100 மீட்டர் துரத்திற்கு தோன்றிய திடீர் பள்ளம்.. வைரலாகும் வீடியோ

சாலையில் 100 மீட்டர் துரத்திற்கு தோன்றிய திடீர் பள்ளம்.. வைரலாகும் வீடியோ

சாலைகளில் பெரும் பள்ளம்

சாலைகளில் பெரும் பள்ளம்

இந்த திடீர் பள்ள விபத்தில் வாகனங்கள், தள்ளு வண்டிகள் சிக்கியதுடன், பொதுமக்கள் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோஷ்மஹால் பகுதியில் சாலைகள் திடீரென உடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான இங்கு நேற்று மதிய வேளையில், நிலநடுக்கம் ஏற்படுவது போல சாலைகள் அதிர்ந்து உடைந்து பெரும் பள்ளங்கள் ஏற்பட்டன.

இந்த பகுதியில் பலர் சாலைகளில் கடைகள் போட்டிருந்த நிலையில், அவர்கள் தள்ளுவண்டி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவை பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும், சில மக்களும் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர். இதில் ஆறு பேருக்கு மருத்துவ சிகிச்சை தரப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பள்ளத்தில் விழுந்த வாகனங்களையும், தள்ளு வண்டிகளையும் மீட்டு தந்தனர். சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இந்த பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாதளம் போல வாய் பிளந்த சாலைகளின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சாலைகள் வடிகால் கால்வாய்களுக்கு மேல் போடப்பட்டுள்ளதாகவும், பல கனரக வாகனங்கள் இதன் வழியாக செல்வது வாடிக்கை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வங்கி கொள்ளைக்கு பக்கா ஸ்கெட்ச்..10 அடி நீள சுரங்கம் தோண்டி 2 கிலோ தங்கம் திருட்டு

பல ஆண்டுகளாக இதை புணரமைக்காமல் விட்டதே இந்த விபத்துக்கு காரணம் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதை சீக்கிரம் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஊழல் ஆட்சி நடத்தி ஹைதரபாத் மாநகராட்சியின் வளர்ச்சி குறித்து அக்கறை காட்டவில்லை என்பதற்கு இதுவே உதாரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமைச்சர் கேடி ராமாராவ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விரைந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மேலும் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என ஹைதராபாத் மாநகராட்சி கூறியுள்ளது.

First published:

Tags: Accident, Hyderabad, Road accident, Viral Video