ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூ.5,000 செலவுடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட சேவல்கள்.. ருசிகர சம்பவம்

ரூ.5,000 செலவுடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட சேவல்கள்.. ருசிகர சம்பவம்

போலீஸ் காவலில் சேவல்கள்

போலீஸ் காவலில் சேவல்கள்

பிடிபட்ட சேவல்களை பராமரிக்க ஒரு நபரை நியமித்து அதற்கு தீவனம் கொடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிசா மாநிலத்தில் உள்ள காவல்நிலையத்தில் 4 சேவல்களை சிறைவைத்த சுவாரஸ்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலோசர் மாவட்டத்தின் முருனா என்ற பகுதியில் டிசம்பர் மாத இறுதியில் சேவல் சண்டனை நடத்துவதை அப்பகுதியினர் வழக்கமாக கொண்டுள்னர். கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் தொடங்கி புத்தாண்டு வரை இந்த சேவல் சண்டை இந்த கிராமப் பகுதிகளில் நடைபெறுகின்றன.

விலங்குகள் பாதுகாப்பு சட்டன் கீழ் இங்கு சேவல் சண்டைகளுக்கு சட்ட ரீதியான தடை உள்ள போதும், காவல்துறை அனுமதி இல்லாமல் பலர் சட்ட விரோதமாக இதை நடத்தி வருகின்றனர். மேலும், போட்டி முடிந்தவுடனே அப்பகுதி மக்கள் அதை கறி சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தாண்டும் இதுபோன்ற சேவல் சண்டை சட்ட விரோதமாக நடைபெறுவதாக  காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் முருனா பஜார் பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட திட்டமிட்டிருந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 4 சேவல்களை மீட்டனர். மேலும், இந்த சேவல்களை பிடித்துக்கொண்டு வந்து சிமுலியா காவல்நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சேவல்கள் சுமார் 3 நாள்களாக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை பராமரிக்க ஒரு நபரை நியமித்து அதற்கு தீவனம் கொடுத்து பாதுகாத்து வருகின்றனர். மேலும், கால்நடை மருத்துவரிடம் இந்த சேவல்கள் கொண்டு செல்லப்பட்ட அவற்றின் உடல் நலன் குறித்து பரிசோதனை செய்யப்பட்டன.

இதையும் படிங்க: கேரளாவில் படகு இல்லம் மூழ்கி விபத்து.. சுற்றுலா பயணி பலி, 4 பேருக்கு சிகிச்சை

அதற்காக இதுவரை சுமார் ரூ.5,000 செலவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு சேவல்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் சம்பவம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. கைதானவர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியே சேவல்கள் குறித்த அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Odisha, Police, Viral News