ஹோம் /நியூஸ் /இந்தியா /

சொத்து தகராறு : 2 பெண்களை உயிருடன் மண்ணைப் போட்டுப் புதைக்க முயற்சி செய்த கொடூரம்!

சொத்து தகராறு : 2 பெண்களை உயிருடன் மண்ணைப் போட்டுப் புதைக்க முயற்சி செய்த கொடூரம்!

மண்னைப் போட்டு புதைக்கப்பட்ட இரண்டு பெண்கள்

மண்னைப் போட்டு புதைக்கப்பட்ட இரண்டு பெண்கள்

ஆந்திராவில் சொத்து தகராறில் சொந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களையே உயிருடன் புகைத்துக் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Andhra Pradesh, India

  ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மண்டாசா மண்டலப் பகுதியில் உள்ள ஹாரிபுரம் கிராமத்தில் சொத்து தகராறில் இரண்டு பெண்களை குடும்பத்தினரே டிராக்டர் மூலம் மண் கொட்டிப் புதைத்துக் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்ட நிலையில், குடும்பத்தினர் மேல் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  காவல்துறை அளித்த தகவலின் படி, கொட்ரா நாராயணன், சீதாராமன் மற்றும் லட்சுமி நாராயணன் சகோதரர்கள். அனைவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். லட்சுமி நாராயணனுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். ஆனால் கொட்ரா நாராயணனுக்கு ஒரு பெண் பிள்ளை மட்டும் தான். கொட்ரா நாராயணன் இறந்ததிற்குப் பின்பு குடும்ப சொத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. கொட்ரா நாராயணனின் மனைவி தாளம்மா மற்றும் அவரின் மகள் சாவித்திரி 2019 ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உரிமையாகச் சேர வேண்டிய குடும்ப சொத்துக்காகப் போராடி வந்துள்ளனர்.

  இந்த நிலையில் அதற்கு நியாயம் வேண்டி அம்மா மற்றும் மகள் இணைந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி எம்.எல்.ஏ. சீதிரி அப்பாலராஜு பேச்சி வார்த்தை நடத்தி அவர்களை போராட்டத்தைத் திரும்பிப் பெறச் செய்தார். மேலும் அவர்களுக்கு நியமாய் சேர வேண்டிய நிலத்தை வாங்கி தருவதாகக் கூறினார்.

  Also Read : அத்வானி 95வது பிறந்தநாள்... நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

  இதனைத் தொடர்ந்து, லட்சுமி நாராயணனின் மகனின் உறவினர் அந்த நிலத்தில் கட்டுமான மண்ணை கொட்டியுள்ளனர். அதனை எதிர்த்து தாலம்மா மற்றும் அவரின் மகள் சாவித்திரி அந்த பகுதிக்குச் சென்று தடுத்துள்ளனர். இதனிடையே, மண் கொட்ட உபயோகப்படுத்திய டிராக்டர் லாரி மூலம் அவர்கள் இருவர் மேல் மண்ணினை கொட்டியுள்ளனர். அதில் இருவரும் புதைந்துள்ளனர்.

  அவர்களில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொட்ரா ராமா ராவ் மேல் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Andhra Pradesh, Andhra woman, Crime News