முகப்பு /செய்தி /இந்தியா / காய்ச்சிய கம்பியை பிடித்து கற்பை நிரூபி... இளைஞருக்கு ஊர் மக்கள் கொடுத்த விநோத தீர்ப்பு..!

காய்ச்சிய கம்பியை பிடித்து கற்பை நிரூபி... இளைஞருக்கு ஊர் மக்கள் கொடுத்த விநோத தீர்ப்பு..!

கம்பியை பிடிக்கும் இளைஞர்

கம்பியை பிடிக்கும் இளைஞர்

பழுக்க காய்ச்சிய கம்பியை பிடிக்கும் போது, கையில் காயம் ஏற்படவில்லை என்றால் அவர் நிரபராதி என்றும், கைகளில் காயம் ஏற்பட்டால் மேலும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

  • Local18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

பெண்களின் கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை நடத்தப்பட்டதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தெலங்கானாவில் நடந்திருக்கிறது. ஆனால், இது ஆணுக்கு நடத்தப்பட்ட அக்னி பரீட்சை.  தெலங்கானா மாநிலம் முலுகு மண்டல் பகுதிக்குட்பட்ட பஞ்சரப்பள்ளி என்ற கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கங்காதர் என்பவரின் அண்ணன் ஜெகந்நாதம் என்பவர் தனது கிராமத்தில் உள்ள ஊர் பெரியவர்களிடம் ஒரு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது தம்பியான கங்காதருக்கும் தனது மனைவிக்கும் இடையே முறைதவறிய உறவு இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நீதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஊர் பெரியவர்கள் விசாரணை நடத்திய போது, தனக்கும் தன் அண்ணன் மனைவிக்கும் எந்தவிதமான தவறான உறவும் இல்லை என கங்காதர் ஆணித்தரமாக மறுத்துள்ளார்.

Read More : மேக்கப் போட்டதால் வீங்கிய புதுமணப்பெண் முகம்... திருமணத்தை நிறுத்திய மணமகன்..!

ஆனாலும், பஞ்சாயத்தார் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. மேலும் இந்த விசாரணைக்காக இரண்டு தரப்பிடமும் தலா 11 லட்சம் ரொக்கமாக வாங்கியுள்ளனர். சில மாதங்கள் ஆன போதும் பஞ்சாயத்தார் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை என்பதால் கங்காதரின் அண்ணன் ஜெகந்நாதம் மீண்டும் ஊர் பெரியவர்களை வற்புறுத்தியுள்ளார். நாதத்தின் நெருக்கடியால் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி பஞ்சாயத்தைக் கூட்டிய ஊர் பெரியவர்கள் ஒரு இரும்புக் கம்பியை பழுக்க காய்ச்சி வெறுங்கையால் கங்காதர் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

பழுக்க காய்ச்சிய கம்பியை பிடிக்கும் போது, கையில் காயம் ஏற்படவில்லை என்றால் அவர் நிரபராதி என்றும், கைகளில் காயம் ஏற்பட்டால் மேலும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, ஊர் மக்கள் முன்னிலையில் தீயிட்டு பழுக்க காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியை வெறுங்கையால் பிடித்து தான் நிரபராதி என்று நிரூபித்துள்ளார் கங்காதர். அதன்பிறகும் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி, கங்காதரின் அண்ணனும், ஊர்ப் பெரியவர்களும் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற கங்காதரின் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பழுக்க காய்ச்சிய கம்பியை தான் பிடித்த போது, அவரது கையில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் குற்றவாளி என்றும் மீண்டும் ஜெநந்நாதம் கூறியுள்ளார்.

காலம் எவ்வளவு தான் மாறினாலும் மூட வழக்கங்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கு தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

First published:

Tags: Crime News, Telangana