வண்டியில் கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நாய் - வைரல் வீடியோ!

வண்டியில் கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நாய் - வைரல் வீடியோ!

மாதிரி படம்

குஜராத் மாநிலம் சூரத்தில், நாய் ஒன்றை இருசக்கர வாகனத்தில் கட்டியவாறு இரண்டு பேர் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூரத்தில் நாய் ஒன்றை வண்டியில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற அரசு பணியில் உள்ள நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில், நாய் ஒன்றை இருசக்கர வாகனத்தில் கட்டியவாறு இரண்டு பேர் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் சலோனி ராதி (Saloni Rathi) என்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காடோதரா (Khatodara ) காவல்நிலையத்துக்கு சென்ற அவர், சமூகவலைதளங்களில் வைரலான வீடியோவைக் காண்பித்து, நாயை கொடுமைபடுத்திய இருவரையும் கைது செய்ய வேண்டும் என முறையிட்டுள்ளார்.

இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீடியோவில் இருக்கும் வண்டி எண்ணை வைத்து அந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில், ஹித்தேஸ் படேல் (Hitesh Patel) என்பவரை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறையினர் அவரிடம்  இது தொடர்பாக விசாரணை நடத்தினர். ஹித்தேஸ் படேல் சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. அவருடன் இருந்த மற்றொரு நபர் தலைமறைவாகியிருப்பதால், அவரையும் தேடி வருகின்றனர். அந்த பெண் காண்பித்த வீடியோவானது வெஸூ பகுதியில் உள்ள மகாவீர் கல்லூரிக்கு அருகில் எடுக்கப்பட்டுள்ளது. 

ஹித்தேஸ் படேல் அரசு சீருடையுடன், நாயின் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றின் ஒருமுனையை பிடித்தவாறு இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்துள்ளார். தலைமறைவாகியுள்ள படேலின் நண்பர் அந்த இருசக்கர வாகனத்தை இயக்கிச் செல்கிறார். நாயை இழுத்துச் செல்லப்பட்டது குறித்து தெரிவித்த ஹித்தேஸ் படேல், வண்டியில் கட்டப்பட்டு இழுத்துச்செல்லப்பட்ட நாய் இறந்துவிட்டதாகவும், அதனை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது வீடியோ எடுத்து சிலர் பரப்பியதாக கூறியுள்ளார். 

Also read... உயிருக்கு ஆபத்தான நோயுடன் போராடிய 14 மாத குழந்தையை காப்பாற்றிய 'லாட்டரி' தொகை!

அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், வீடியோவில் நாய் உயிருடன் இருப்பதை தெளிவாக பார்க்க முடிவதாக கூறியுள்ளனர். பிரயாஸ் டீம் என்விரான்மென்ட் (Prayas Team Environment) குழுவைச் சேர்ந்த தர்ஷன் தேசாய் (Darshan Desai ) பேசும்போது, அவர்கள் இழுத்துச்சென்ற நாய் இறக்கவில்லை என்பது வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. 

நாய்கள் மற்றும் கால்நடைகளை இறந்தபிறகு அப்புறப்படுத்துவதற்காக சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன், எஸ்.எம்.சி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், அந்த நிறுவனம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, ஹித்தேஸ் படேல் மற்றும் அவரது நண்பர் மீது விலங்குள் வதைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சாலையில் இழுத்துச்சென்ற நாயும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: