முகப்பு /செய்தி /இந்தியா / மாந்திரீக வைத்தியம்.. ஒருவயது குழந்தையின் பற்களை உடைத்த மந்திரவாதி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் சம்பவம்

மாந்திரீக வைத்தியம்.. ஒருவயது குழந்தையின் பற்களை உடைத்த மந்திரவாதி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் சம்பவம்

கைது செய்யப்பட்ட மந்திரவாதி அஜய்

கைது செய்யப்பட்ட மந்திரவாதி அஜய்

மந்திரவாதியின் மூட நம்பிக்கை செயலால் உடல்நலக்குறைவுக்கு ஆளான ஒரு வயது ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

நவீன தொழில்நுட்ப யுகத்திலும் மாந்தீரிகத்தை நம்பி தொடர்ந்து மோசம் போகும் மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். அப்படித்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதி தனது ஒரு வயது குழந்தையை மந்திரவாதியிடம் அழைத்து சென்று பறிக்கொடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள கோதாவாளி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவரின் ஒரு வயது மகன் அனுஜ் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். உள்ளூர்காரர்கள் சிலர் ஜிதேந்திராவிடம் குழந்தையை அதே ஊரைச் சேர்ந்த மந்திரவாதி அஜய் என்பவரிடம் அழைத்து சென்றால் குணமாகிவிடும் என்று யோசனை தெரிவித்துள்ளனர். இதை கேட்டு ஜிதேந்திராவும் அவரது மனைவியும் குழந்தையை மந்திரவாதி அஜய் இடம் கொண்டு சென்றுள்ளனர்.

அந்த மந்திரவாதியே முதலில் ஒரு டப்பாவில் இருந்து ஏதோ ஒரு திரவத்தை எடுத்து குழந்தைக்கு கொடுத்துள்ளார். பின்னர்,மாந்தரீக வைத்தியம் எனக் கூறி குழந்தையின் பற்களை உடைத்தும், குழந்தையை தரையில் வீசி அடித்தும் கொடூரமான செயல்களை அவர் செய்துள்ளார். பதறிப்போன பெற்றோர் குழந்தையை அங்கிருந்து மருத்துவமனைக்கு தூக்கி ஓடியுள்ளனர். மந்திரவாதியின் செயலால் குழந்தையின் உடல்நிலை மேலும் நலிவடைந்து மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கொடூரமான செயல்கள் மூலம் தங்கள் குழந்தையின் உயிரை பறித்த மந்திரவாதி மீது காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறை மந்திரவாதி அஜய்யை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளது.இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Superstition, Uttar pradesh