ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலன் பேசாததால் பள்ளி மாணவி விஷம் குடித்து மரணம்.. உடன் இரு தோழிகளும் விஷம் குடித்ததால் அதிர்ச்சி!

காதலன் பேசாததால் பள்ளி மாணவி விஷம் குடித்து மரணம்.. உடன் இரு தோழிகளும் விஷம் குடித்ததால் அதிர்ச்சி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒரே பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் விஷம் குடித்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh, India

  மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் காதல் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களுக்காக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் இரு மாணவிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

  மத்தியப் பிரதேசத்தின் ஷேஹோர் மாவட்டத்தில் உள்ள அஷ்தா என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பை ஒன்று சேர்ந்து கட் அடித்துள்ளனர். வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிய மூவரும் பேருந்தில் ஏறி 100 கிமீ தாண்டியுள்ள இந்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

  பயணித்த மூன்று மாணவிகளில் ஒரு மாணவியின் காதலன் இந்தூரில் வசித்து வருகிறார். காதலர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், காதலன் சில நாள்களாக மாணவியிடம் பேசிவில்லை. இதனால் மாணவி விரக்தியில் இருந்துள்ளார். எனவே, அவரை நேரில் சென்று பார்க்கலாம் என்ற திட்டத்தில் மூவரும் அங்கு சென்றுள்ளனர். இந்தூரில் அவர்கள் இறங்கியதும் காதலனை தொடர்பு கொண்டு வர சொல்லியுள்ளார் அந்த பள்ளி மாணவி. ஆனால் காதலன் அவருக்கு பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், அங்குள்ள பூங்காவில் காதலனுக்காக வெகுநேரம் காத்திருந்து பார்த்து விரக்தி அடைந்த மாணவி, தான் கையில் கொண்டு வந்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

  காதல் விரக்தியில் மாணவி விஷம் குடித்த நிலையில், உடன் வந்த மற்ற இரு மாணவிகளும் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளனர். பூங்காவில் மூன்று மாணவிகள் மயங்கி இருப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி இரு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இதையும் படிங்க: 15 வயதை தாண்டிய இஸ்லாமிய பெண்ணின் திருமணம் குழந்தை திருமணம் ஆகாது- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  உயிர்பிழைத்த ஒரு மாணவி அளித்த வாக்குமூலத்தில், ஒரு மாணவி காதலன் பேசவில்லை என்பதால் முதலில் விஷம் குடித்ததாகவும், அதை பார்த்து மற்றொரு மாணவி தனது குடும்ப கஷ்டத்தை நினைத்து வருந்தி விஷம் குடித்ததாகவும் கூறினார். தனது தோழிகள் இருவரும் விஷம் குடித்த வேதனையில் என்ன செய்வதென்று தெரியாமல் தானும் விஷம் அருந்திவிட்டேன் என கூறியுள்ளார். 16 வயது பள்ளி மாணவிகள் இவ்வாறு கூட்டாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Madhya pradesh, Poison, School students, Suicide