முதல்முறையாக மத்திய பிரதேசத்தில் பசுக்களுக்கான அமைச்சரவை உருவாக்கம்...

நாட்டிலேயே முதல்முறையாக பசுக்களை பாதுகாக்க அமைச்சரவை ஒன்று மத்திய பிரதேசத்தில் உருவாக்கப்படுகிறது.

  • Share this:
மாடுகளை பாதுகாக்கவும், அதன் அபிவிருத்திக்காகவும் அமைச்சரவை உருவாக்கப்படுவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவையில் உள்துறை, வனத்துறை, வேளாண், பஞ்சாயத்து மற்றும் கிராம மேம்பாட்டுத்துறை, கால்நடைத்துறை அமைச்சர்கள் இடம்பெறுகிறார்கள். இதன் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி அகர் மால்வாவில் உள்ள பசுக்களுக்கான சரணாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிருந்தாவனத்தில் பசுக்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை கிருஷ்ணர் அவரது தந்தையிடம் ஒப்படைத்த நாளின் அடையாளமான கோபாஸ்தமி தினத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வரட்டிகளின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த அமைச்சரவை நடவடிக்கை எடுக்கும். அதேபோல பால் சார்ந்த பொருட்களின் விற்பனையை மேம்படுத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...பெரியசோரகை பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்..

இந்த அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை 6 துறைகள் செயல்படுத்தும். இதனை விமர்சித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், பசுக்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக மறந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரம் பசு பாதுகாப்பகங்களை ஏற்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமல்நாத், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 15 மாதங்களில் 15 பசு காப்பகங்களை கூட தொடங்கவில்லை என்றும் விமர்சித்துள்ளது.
First published: November 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading