மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் சிவராஜ்சிங் சௌஹான்!

மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் சிவராஜ்சிங் சௌஹான்!
சிவராஜ் சிங் சௌஹான்
  • Share this:
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக சிவராஜ்சிங் சௌஹான் இன்று மாலை பதவியேற்பார் என்று தெரிகிறது.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சியிலிருந்து மூத்த தலைவர் ஜோதிர்ராதித்ய சிந்தியா அண்மையில் விலகினார். அதனையடுத்து, அவருடைய ஆதரவாளர்கள் 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதனையடுத்து, கமல்நாத் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டது. கமல்நாத் அரசை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து, பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாத நிலையில், கமல்நாத் ராஜினாமா செய்தார். இந்த சூழலில் பதவி விலகிய 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜே.பி. நட்டாவை சந்தித்து அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதனையடுத்து, பா.ஜ.க ஆட்சியமைப்பது உறுதியானது.பா.ஜ.க சார்பில் முதலமைச்சர் பதவிக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முன்னாள் அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகியோரது பெயர்களும் அடிபட்டன.


இந்தநிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சார்பில் சிவராஜ் சிங் சௌஹானே சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று மாலையில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

Also see:
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading