ரஃபேல் போர் விமானத்தின் முதல் இந்திய பெண் விமானி ஷிவாங்கி சிங், குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்தியாவின் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
Also read:
காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பிடித்த பிரபலம் பாஜகவில் இணைந்தார்!!
குறிப்பாக முப்படைகளின் அலங்கார வாகனங்கள் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
Also read:
தகராறில் ஈடுபட்ட மனைவியை கட்டிடத்தின் 4வது மாடி லிப்ட் குழாய் வழியாக தள்ளிவிட்ட கணவர்!!
எதிர்காலத்திற்கு விமானப்படை தயாராகி வருகிறது என்பது இன்று பங்கேற்ற விமானப்படை அலங்கார ஊர்தியின் மையக் கருத்தாக அமைந்தது. ரஃபேல் போர் விமானத்தின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு அவை ஊர்தியில் இடம்பெற்றிருந்தன. இலகு ரக ஹெலிகாப்டர்கள், 3டி ரேடார் தொழில்நுட்பம், 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது முக்கிய பங்காற்றிய மிக் 21 ரக போர் விமானம் உள்ளிட்டவற்றின் மாதிரிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.
அணிவகுப்பின்போது, ரஃபேல் போர் விமானத்தின் முதல் இந்திய பெண் விமானி ஷிவாங்கி சிங் கலந்து கொண்டார். கடந்த குடியரசு தின விழா அணிவகுப்பின்போது, முதல் பெண் போர் விமானி லெப்டினன்ட் பாவனா காந்த் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த ஷிவாங்கி சிங், இந்திய விமானப்படையில் கடந்த 2017-ல் இணைந்தார். பெண் போர் விமானிகளின் 2வது பிரிவில் இடம்பெற்றிருந்த ஷிவாங்கி சிங், ரஃபேலில் பறப்பதற்கு முன்பாக மிக் 21 போர் விமானத்தை சிறப்பாக இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பஞ்சாபின் அம்பாலா விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்றிருந்தார்.
பிரான்சுடன் ரூ. 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றில் 32 விமானங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 விமானங்கள் ஏப்ரல் இறுதிக்குள் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.