Home /News /national /

'பாஜக ஆளும் மாநிலங்களில் வருமானமும் இல்லை; வரியும் இல்லை' : சிவசேனா கடும் விமர்சனம்

'பாஜக ஆளும் மாநிலங்களில் வருமானமும் இல்லை; வரியும் இல்லை' : சிவசேனா கடும் விமர்சனம்

உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். இந்த முறை அகிலேஷ் யாதவுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. - சஞ்சய் ராவத்

உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். இந்த முறை அகிலேஷ் யாதவுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. - சஞ்சய் ராவத்

உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். இந்த முறை அகிலேஷ் யாதவுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. - சஞ்சய் ராவத்

    பாஜக ஆளும் மாநிலங்களில் வருமானமும் இல்லை, வரியும் இல்லை என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறியதாவது-

    மகாராஷ்டிராவில் மட்டும்தான் வருமானமும், வரியும் இருப்பதாக நினைக்கிறேன். பாஜக ஆளும் மாநிலங்களில் வருமானமும் கிடையாது, வரியும் கிடையாது. மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாகத்தான் வருமான வரித்துறையினர் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் சோதனை நடத்துகின்றனர். நாட்டின் மற்ற எந்தப் பகுதியிலும் வருமான வரிச்சோதனை நடத்தப்படவில்லை.

    இதையும் படிங்க - உத்தரப் பிரதேசத்தில் இன்று 5ம் கட்டத் தேர்தல்: முக்கிய தொகுதிகளில் வாக்குப்பதிவு

    வருமான வரித்துறை அதிகாரிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சோதனை நடத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் மறைத்து வைப்பதற்கு என்று எங்களிடம் எதுவும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களும் பார்க்கிறார்கள். எதைத் தேடுகிறார்களோ அதனை வருமான வரித்துறையினர் தேடி கண்டுபிடிக்கட்டும்.

    இதையும் படிங்க - உக்ரைனில் சிக்கிய 240 இந்தியர்களுடன் 3-வது விமானம் இந்தியா திரும்பியது

    உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். இந்த முறை அகிலேஷ் யாதவுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. எங்கள் கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரக் களத்திற்கு சென்றுள்ளார். பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் அகிலேஷ் யாதவை தேர்வு செய்வார்கள் என்பது என்னுடைய கணிப்பு.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மும்பை கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் சேர்மனுமான யஷ்வந்த் ஜாதவுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
    Published by:Musthak
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி