• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரசாந்த் கிஷோருக்கு பதிலடி.. காங்கிரஸ் கட்சிக்காக வக்காலத்து வாங்கும் சிவசேனா தலைவர்!

பிரசாந்த் கிஷோருக்கு பதிலடி.. காங்கிரஸ் கட்சிக்காக வக்காலத்து வாங்கும் சிவசேனா தலைவர்!

Prashant kishor

Prashant kishor

சஞ்சய் ராவத் பேசும்போது , “நாட்டின் பெரியதும், மிக ஆழமான வேர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த அரசையும் அமைக்க முடியாது என தெரிவித்தார்.

  • Share this:
காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி குறித்து பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பேசிய கருத்துக்கள் தேசிய அரசியலில் பரபரப்பாக மாறியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசியிருக்கிறார்.

பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்து வெற்றி பெறச் செய்ததில் பெரும்பங்காற்றியவர், ஐ-பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாற்று சக்தியை உருவாக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தற்போது தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கோவா மாநில சட்டமன்ற தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக கோவாவில் முகாமிட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சி குறித்து சில தினங்களுக்கு முன் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

தோற்றாலும், ஜெயித்தாலும் அடுத்த 40 ஆண்டுகளுக்கு தேசிய அளவில் பாஜக நிலைத்து நிற்கும், பிரதமர் மோடியின் பலம் என்ன? அவர் ஏன் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார்? என ராகுல் காந்தி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். ராகுல் நினைப்பது போல மக்கள் மோடியை அவ்வளவு எளிதில் தூக்கி எறிந்து விட மாட்டார்கள், ஒரு வேளை மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும் பாஜகவை ஒன்றும் செய்ய முடியாது என ராகுல் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் நேரடியாக தாக்கி பேசியிருந்தார் பிரசாந்த் கிஷோர்.

Also read:  பாகிஸ்தான் மேஜர் ஜெனரலின் மகனுக்கு தேசதுரோக வழக்கில் 5 ஆண்டு சிறை!

பிரசாந்த் கிஷோரின் கருத்துக்கு பதிலடி தந்திருக்கிறார் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். அம்மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன.

புனேவில் செய்தியாளர்களிடையே சஞ்சய் ராவத் பேசும்போது , “நாட்டின் பெரியதும், மிக ஆழமான வேர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த அரசையும் அமைக்க முடியாது. காங்கிரஸ் தான் தற்போது முக்கிய எதிர்கட்சி. மற்ற கட்சிகள் மாநிலக் கட்சிகள் தான்.” என தெரிவித்தார்.

Also read:  முகத்தை மூடி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய 9ம் வகுப்பு மாணவர்கள் – சொன்ன காரணத்தால் அதிர்ச்சி!

பல ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் நிலைத்து நிற்கும் என பிரசாந்த் கிஷோர் கூறுகிறாரே என கேட்டதற்கு, பாஜக அரசியலில் நிலைத்து நிற்கும், ஆனால் எதிர்கட்சியாக மட்டுமே என்றார்.

பாஜக தன்னை உலகின் பெரிய அரசியல் கட்சி என கூறிக்கொள்கிறது. தேர்தலில் தோற்றால் அந்த பெரிய கட்சி எதிர்கட்சியாக மாறிவிடும். உதாரணமாக மகாராஷ்டிராவில் பாஜக எதிர்கட்சியாக தான் உள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: