Home /News /national /

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது

 சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது

மும்பை குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    மும்பை குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரிக்க இருமுறை சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    இந்நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று சஞ்சய் ராவத் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேர சோதனைக்குப் பின் அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Mumbai, Shiv Sena

    அடுத்த செய்தி