Home /News /national /

நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு

நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு

சிவசேனா வழக்கு

சிவசேனா வழக்கு

Shiv Sena petition in Supreme court: சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரவு, ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த  ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு தொடர்ந்துள்ளது.

    காராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, டெல்லி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ், 39 சிவசேனா எம்எல்ஏ-க்கள் தற்போதைய கூட்டணி அரசுடன் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்  என்று அவர் உத்தரவிட்டுள்ளார். மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா ஆட்சி தப்புமா?

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட ஆளுநரின் முடிவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்,
    எங்களின் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க கோரி ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கை.இந்த தருணத்திற்காகத்தான் ஆளுநர் காத்திருந்தார். அவரது உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம்’ என்று கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து தெரிவித்தவர் தலை துண்டித்து படுகொலை.. வீடியோ வெளியிட்டு மிரட்டல்

    இந்நிலையில், சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரவு, ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Maharastra, Shiv Sena, Supreme court, Uddhav Thackeray

    அடுத்த செய்தி