Home /News /national /

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை பயணம்- ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை பயணம்- ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

Shiv sena: கவுகாத்தியில்இருக்கும் எம்எல்ஏக்கள் சிவசேனா தலைமையிடம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களது பெயர்களை சிவசேனா அறிவிக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டார்

    கவுகாத்தியில் தம்முடன் 50 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், அவர்களுடன் விரைவில் மும்பை செல்ல இருப்பதாகவும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, தம்முடன் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறினார். எந்த எம்எல்ஏக்களுக்கும் நெருக்கடி கொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் கூறினார்.

    கவுகாத்தியில்இருக்கும் எம்எல்ஏக்கள் சிவசேனா தலைமையிடம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களது பெயர்களை சிவசேனா அறிவிக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டார். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா அமைச்சரவை கூடுகிறது.

    இதனிடையே, கட்சிக்கு புறம்பாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், தானே மாநகராட்சி மேயர் மீனாட்சி ஷிண்டே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

    இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், டெல்லி சென்றுள்ளார். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பாஜக தலைவர்களுடன் தேவேந்திர பட்னவிஸ் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Maharastra, Shiv Sena, Uddhav Thackeray

    அடுத்த செய்தி