சிவசேனா வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்... செருப்படி ‘புகழ்’ எம்.பி.க்கு சீட் இல்லை...!

Lok Sabha Election 2019 | மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவை இடங்களில் சிவசேனா 25 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் போட்டியிட உள்ளது.

news18
Updated: March 22, 2019, 8:28 PM IST
சிவசேனா வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்... செருப்படி ‘புகழ்’ எம்.பி.க்கு சீட் இல்லை...!
ரவீந்திர கெய்க்வாட்
news18
Updated: March 22, 2019, 8:28 PM IST
மக்களவை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சிவசேனா கட்சி, 21 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - பாஜக கூட்டணி அமைத்து மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மொத்தமுள்ள 48 மக்களவை இடங்களில் சிவசேனா 25 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் போட்டியிட உள்ளது.

இந்நிலையில், 21 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா இன்று வெளியிட்டுள்ளது. கடந்த தேர்தலில் 18 இடங்களில் வென்ற சிவசேனா 17 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் மட்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை. கடந்த 2017-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான பணியாளரை செருப்பால் அடித்து ‘புகழ்’ பெற்ற ரவீந்திர கெய்க்வாட்.

டெல்லி விமான நிலையத்தில் விமான நிறுவனத்தின் பணியாளரை செருப்பால் அடித்து பின்னர், விமானத்தில் அவர் பயணிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு விமான நிறுவன பணியாளர்களிடம் சட்ட விரோதமாக செயல்படுவர்களை தடை செய்வதற்கென புதிய விதிகள் உருவாக்கப்பட்டது.

Loading...
Also See...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...