• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ட்ரம்ப் இந்தியா வருகை: சிவசேனா விமர்சனம்

ட்ரம்ப் இந்தியா வருகை: சிவசேனா விமர்சனம்

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

  • Share this:
    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருவதையொட்டி நடைபெறும் முன் ஏற்பாடுகள் “அடிமை மனோபாவத்தை” காட்டுவதாக சிவ சேனா விமர்சித்துள்ளது.

    ட்ரம்ப் இரண்டு நாள்கள் அரசுப் பயணமாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வருகைதர இருக்கிறார். அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அதை சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வமான ஏடான சாம்னா, ’இது இந்தியர்களின் அடிமை மனோபாவத்தைக் காட்டுகிறது’ என விமர்சித்துள்ளது.

    சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், குஜராத் அகமதாபாதில் குடிசை வாழ்ப் பகுதிகளை மறைக்கும் விதமாக நான்கு அடிகளில் சுவர்கள் எழுப்பப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன், ட்ரம்ப்பின் வருகை அந்தச் சுவற்றுக்கு அப்பாலுள்ள மக்களுக்கு நலன் பயக்கவோ அந்நிய செலாவணிச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவோ போவதில்லை என்றும் அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அதில் ”விடுதலைக்கு முன்னர், பிரிட்டிஷ் அரசர்களோ அரசிகளோ இந்தியா போன்ற அவர்களுடைய அடிமை நாடுகளுள் ஒன்றைப் பார்வையிட வருவார்கள். அது போன்ற முன்னேற்பாடுகள்தாம் இப்போது ட்ரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இது இந்தியர்களின் அடிமை மனோபாவத்தையே காட்டுகிறது” என்று விமர்சித்திருக்கிறது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: