கொரோனா 2வது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசுமே காரணம் - சிவசேனா குற்றச்சாட்டு

கொரோனா 2வது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசுமே காரணம் - சிவசேனா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 2வது அலைக்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசுமே காரணம் என்று சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 2வது அலைக்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசுமே பொறுப்பு என்று சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட சீனா பொறுப்பாக இருந்தாலும், கொரோனா 2ஆம் அலை ஏற்பட தேர்தல் ஆணையமும், மத்திய அரசுமே முழு பொறுப்பு. அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கும் மாநிலங்களில் இருந்தே 500 மடங்கு வேகமாக நாடு முழுவதும் வைரஸ் பரவியுள்ளது.

    உதங்களது அரசியல் ஆதாயத்துக்காக 2வது அலையை உருவாக்கியுள்ளனர். தற்போது நாட்டில் ஆக்சிஜன், ரெம்ட்சிவிர் மருந்து, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மயானங்கள் நிரம்பி வழிகின்றன. ஆனால் மத்திய அரசானது மேற்கு வங்கத்தில் தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு தனது அரசியல் தலையீட்டை குறைத்து, கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் கவனம் செலுத்தினால் நாட்டில் நிலைமை கட்டுக்குள் வரும் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

    மேலும், மேற்குவங்கத்தில் பிரச்சாரத்தை முடித்து கொரோனா பரவலுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பாஜகவினர சென்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், கும்பமேளா போன்ற மத விழாக்களுக்கும், தேர்தல் பிரச்சாரங்களுக்கும் தற்போது வரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்ய தயாராக இல்லையென்றால், ஹரித்வாரில் கும்பமளாவுக்கு கூடும் லட்சக்கணக்கான பக்தர்களை மட்டும் எப்படி தவறு சொல்ல முடியும்? என அடுக்கடுக்கான கேள்விகளை சிவசேனா எழுப்பியுள்ளது.

    அதேபோல், கொரோனா வைரஸ் பரவல் நிலையை கையாளும் மகாராஷ்டிராவை சாடும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நிலவரம் குறித்து பேச மறுக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: