Shiv Nadar : ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் ராஜினாமா

ஷிவ் நாடார்

இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமாக ஹெச்.சி.எல். திகழ்கிறது.

  • Share this:
    ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதே சமயம் இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் நிர்வாக இயக்குநராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருப்பார். மேலும், ஐ.பி.எம். நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி வனிதா நாராயணன் ஹெச்.சி.எல். இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஷிவ் நாடார் 1976ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஹெச்.சி.எல். (இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்) நிறுவனத்தை தொடங்கினார். 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். தொழில்நுட்பத் துறையில் பல்வேறு முன்முயற்சிகளையும், மென்பொருள் தொழில்நுட்பங்களையும் ஹெச்.சி.எல். நிறுவனம் முன்னெடுத்துச் சென்றது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றது.

    ஹெச்.சி.எல். நிறுவனம் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்குத் தேவையான மென்பொருளை வடிவமைத்தது. இந்நிலையில், இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமாக ஹெச்.சி.எல். திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை ஷிவ் நாடார் தன்வசம் வைத்துள்ளார். கடந்த ஆண்டு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் விலகினார். அந்த பொறுப்பில் கடந்த ஓராண்டு காலமாக இவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா உள்ளார்

    Read More : Digital Euro : சீனாவுக்குப் போட்டியாக ஐரோப்பாவின் டிஜிட்டல் யூரோ நாணயம் அறிமுகம்

    ஷிவ் நாடார் 1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ‘மூலைபொழி’ என்ற கிராமத்தில், சிவசுப்ரமணி நாடார் என்பவருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு கோயமுத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். 1968 ஆம் ஆண்டு டெல்லி சென்றார். அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக பணியாற்றினார்.

    Must Read : சென்னை-புதுச்சேரி-நாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்து - 5 மாதங்களில் தொடக்கம்

    அதனைத் தொடர்ந்து, தன்னுடன் பணிபுரிந்த ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஹெச்.சி.எல். நிறுவனத்தைத் தொடங்கினார். 1982ஆம் ஆண்டு, எச்.சி.எல். நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தொழில்துறையில் படிப்படியாக முன்னேறி வளர்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: