முகப்பு /செய்தி /இந்தியா / சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வெறும் தோப்புக்கரணம் தான் தண்டனையா? வைரலாகும் வீடியோ

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வெறும் தோப்புக்கரணம் தான் தண்டனையா? வைரலாகும் வீடியோ

தோப்புக்கரணம் தண்டனை

தோப்புக்கரணம் தண்டனை

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Bihar, India

பீகாரில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஐந்து தோப்புக்கரணம் போடச் சொல்லி  விநோத தண்டனை வழங்கியிருக்கிறது ஒரு கிராம பஞ்சாயத்து. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகாரில் சாதிய ரீதியாலான அடக்குமுறைகளுக்கு பஞ்சமில்லை. அது போல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அங்கு அடிக்கடி நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் சட்டரீதியாக அணுகப்படுவதில்லை. கிராம பஞ்சாயத்து மூலமே தீர்வு காணப்படுகிறது.

இதனால் பாலியல் குற்றத்தில் ஈடுபட யாரும் அஞ்சுவதில்லை. அதே வரிசையில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வரும் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித்தருவதாக கூறி தன் பண்ணைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்குவைத்து சிறுமியை அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த சம்பவத்தை சிலர்  பார்த்து பதறிப் போயிருக்கிறார்கள்.

உடனடியாக அந்த நபரை கையும் களவுமாக பிடித்து கிராம பஞ்சாயத்தார் முன்பு நிறுத்தியிருக்கிறார்கள் பஞ்சாயத்தாரும் விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில் அந்த நபர் சிறுமிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியாகியிருக்கிறது. உடனே கோபமடைந்த பஞ்சாயத்து பெரியவர்கள் அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்.

மேலும் படிங்க: கெஜ்ரிவாலை கொலை செய்ய சதித்திட்டம்.. பாஜக தலைவரை கைது செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை!

அதன்படி கிராமப் பஞ்சாயத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளி ஐந்து தோப்புக்கரணம் போட வேண்டும் என்ற கடுமையான தீர்ப்பை சொல்லியி்ருக்கிறது அந்த கிராம பஞ்சாயத்து. குற்றவாளியும்  ஐந்து தோப்புக்கரணம் போட்டுள்ளார். அதை வீடியோவா பதிவு செய்து இணையத்திலும் பதிவேற்றியிருக்கிறார்கள் சிலர். அந்த வீடியோ இப்போது பெரிய அளவில் வைரலாகியிருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு சரியான தண்டனை வழங்கப்படாததை கண்டித்துள்ளதோடு, ஆணாதிக்கம் மிக்க மிகவும் ஒருதலைபட்சமான தீர்ப்பு என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ட்விட்டரில்  முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை டேக் செய்து  பீகாரில் இப்படிப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்படுவது முறையான செயலா என விளாசியிருக்கிறார்கள்.

top videos

    இதையடுத்து குற்றாவளி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் நவாடா மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் கவுரவ் மங்களா தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தாமல் தப்பவிட்டவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Bihar, Girl Child, Rape