• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வேளாண் சட்டங்களை எதிர்த்து தடையை மீறி பேரணி நடத்திய சிரோமணி அகாலிதளம் கட்சி தலைவர் கைது

வேளாண் சட்டங்களை எதிர்த்து தடையை மீறி பேரணி நடத்திய சிரோமணி அகாலிதளம் கட்சி தலைவர் கைது

நாடாளுமன்றத்தை நோக்கி, கருப்பு வெள்ளி பேரணி செல்ல உள்ளதாக சிரோமணி அகாலிதளம் கட்சி அழைப்பு விடுத்தது.

  • Share this:
    வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் பேரணியில் ஈடுபட முயன்ற சிரோமணி அகாலிதளம் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியின் தலைவர் சுக்பிர் பாதல், முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்ட தலைவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் ராகப் கஞ்ச் பகுதியில் உள்ள குருத்வாராவிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி, கருப்பு வெள்ளி பேரணி செல்ல உள்ளதாக சிரோமணி அகாலிதளம் கட்சி அழைப்பு விடுத்தது.

    இதற்கு போலீஸார் தடை விதித்திருந்த நிலையில், குருத்வாரா பகுதியில் அகாலிதளம் கட்சியினர் எராளமானோர் குவிந்தனர். இதில், ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டதுடன், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது. இதனால், ஐடிஓ, விகாஸ் மார்க், டெல்லி கேட், கரோல் பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், விவசாயிகளும், சிரோமணி அகாலிதளம் கட்சியினரும் தடையை மீறி பேரணி செல்ல முயன்றனர். போலீஸாரின் தடுப்புகளை அகற்ற முயன்றதால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்துக்கு தலைமை வகித்த அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாதல், அவரது மனைவியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைதுசெய்து, சன்தாத் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க போலீஸார் தங்களது பலத்தை பயன்படுத்தியதாகவும், எல்லைப் பகுதியை மூடியதாகவும், தங்களது தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதாகவும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றம்சாட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: