ஹோம் /நியூஸ் /இந்தியா /

சீரடி சாய் பாபா பக்தர்களுக்கு பிரத்தியேக திருமண தகவல் இணையதளம் - அறக்கடளை புதிய ஏற்பாடு

சீரடி சாய் பாபா பக்தர்களுக்கு பிரத்தியேக திருமண தகவல் இணையதளம் - அறக்கடளை புதிய ஏற்பாடு

சீரடி சாய் பாபா

சீரடி சாய் பாபா

மிக ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு, செலவுகளை சீரடி அறக்கட்டளையே ஏற்று நடத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சீரடி சாய் பாபாவிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அமகதுநகர் மாவட்டத்தில் உள்ள சீரடியில் பிரசித்தி பெற்ற இக்கோயில் உள்ளது. இந்த கோயிலை சீரடி சாய் பாபா அறக்கட்டளை நிர்வகித்து நடத்தி வருகிறது.

  இந்நிலையில், சாய் பாபா பக்தர்களுக்காக சீரடி சாய் பாபா அறக்கட்டளை வாழ்க்கையின் முக்கிய நிகழ்வான திருமணத்திற்கு உதவ புதிய திருமண தகவல் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. shirdivivah.com என்ற இந்த இணையதளம் பிரத்தியேகமாக சீரடி சாய் பாபா பக்தர்களுக்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சாய் பாபா பக்தர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு தங்களுக்கு தேவையான வரன்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

  இதில் வரன் தேடும் நபர்கள் தங்கள் புகைப்படம், குடும்ப விவரங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை விரிவாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இதில் பதிவு செய்யும் அனைத்து ப்ரோபைல்களையும் கோயிலில் உள்ள சாய் பாபாவின் திருவடிகளில் வைத்து ஆசி பெற்று தரப்படும். இதன் மூலம் சாய் பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் சிறந்த வரனைத் தேர்வு செய்து கொள்வார்கள் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

  இதில் இலவச பதிவுடன் சேர்த்து, கட்டண பதிவு, விஐபி பதிவு என மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. கட்டணப் பதிவுக்கு ரூ.5,100, விஐபி பதிவுக்கு ரூ.11,000 பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளை தலைவர் ரோஷன் குமார் கூறுகையில், 'சாய் பக்தர்களுக்காக திருமண தகவல் மையம் வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால வேண்டுகோள்.

  இதையும் படிங்க: திருப்பதி மலைக்கு இந்த பொருள்களை எல்லாம் கொண்டு செல்லக்கூடாது.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

  மிக ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு, செலவுகளை சீரடி அறக்கட்டளையே ஏற்று நடத்தும். விருப்பம் உள்ளவர்கள் கட்டணம் செலுத்திக் கொண்டு சீரடி அறக்கட்டளையில் திருமணம் செய்து கொள்ளலாம்' என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Matrimony, Shirdi sai baba