• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆபாச பட விவகாரம்: கணவருடன் வாக்குவாதம் கண்ணீர்விட்டு அழுத ஷில்பா ஷெட்டி

ஆபாச பட விவகாரம்: கணவருடன் வாக்குவாதம் கண்ணீர்விட்டு அழுத ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும் பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக sஷில்பா ஷெட்டி புலம்பியுள்ளார்.

  • Share this:
    விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸார் வீட்டுக்கு சென்ற போது ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீஸார் கூறுகின்றனர். 

    பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, வெளியிட்ட குற்றத்திற்காக அண்மையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் என கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் இறக்கியதில் ஆபாச பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. ஆதாரங்களின் அடிப்படையில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

    Also Read: கஞ்சா தோட்டம் போட்டு கோடீஸ்வரனாக திட்டம் போட்ட வாலிபர் - நண்பரால் சிக்கிய பரிதாபம்

    இந்த விவகாரம் தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட பின் முதன்முறையாக நேற்று முன்தினம் அவரை விசாரணைக்காக போலீஸார் வீட்டிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது ராஜ் குந்தராவுடன் ஷில்பா ஷெட்டி வாக்குவாதம் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸார் வீட்டுக்கு சென்ற போது ஷில்பா ஷெட்டி மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஷில்பா உணர்ச்சிவப்பட்டு பேசியதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது. கண்ணீருடன் ராஜ் குந்த்ராவுடன் சத்தம் போட்டுள்ளார். குடும்பத்தின் நற்பெயர் பாழடைந்துவிட்டது. தொழில்களில் போட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. நிதி இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.இப்படியான காரியத்தை செய்ய வேண்டிய அவசியம் என்ன தேவை இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும் பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக புலம்பியுள்ளார். குற்றப்பிரிவு போலீஸார் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராஜ் குந்த்ரா தனது பழைய போனை மார்ச் மாதம் மாற்றியுள்ளார். தற்போது புதிய போனை உபயோகித்து வருகிறார். பழைய போன் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் கேள்வி எழுப்பியதற்கு அதனை தூக்கி எரிந்துவிட்டதாக கூறியுள்ளார். இதன்காரணமாக போனில் முக்கியமான ஆவணங்கள் இருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ராஜ் குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

    ஷில்பா ஷெட்டியிடம் இதுவரை போலீஸார் இரண்டு முறை தனியாக விசாரணை செய்துள்ளனர். கடந்தவாரம் காவல்நிலையத்தில் வைத்து ஒருமுறையும் , வீட்டில் வைத்து ஒருமுறையும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகைக்கு தொடர்பு இல்லை.விசாரணை இருக்காது என போலீஸார் அதிகாரி கூறியதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: