• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரூ. 1.51 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா மீது வழக்கு

ரூ. 1.51 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா மீது வழக்கு

லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ரா, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியை 2-வது முறையாக கடந்த 2009-ல்8 திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக ராஜ்குந்த்ரா உள்ளார்.

  • Share this:
    ரூ. 1.51 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பாஷெட்டி - ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதின் பராய் என்ற தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் மும்பை பாந்த்ரா போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 2014-ல் எஸ்.எப்.எல். என்ற ஃபிட்னஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யுமாறு ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் நிதினிடம் ரூ. 1.51 கோடி பணம் கேட்டு, பெற்றுள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதினுக்கு ஒரு ஃபிரான்சைசும், ஜிம் மற்றும் ஸ்பா ஆகியவற்றை புனே அருகே அமைத்துத் தர வேண்டும். ஆனால் இவை நடைபெறாததால் கொடுத்த பணத்தை நிதின் திருப்பிக் கேட்டுள்ளார்.

    பணத்தை திருப்பித் தரமாமல், நிதினை மிரட்டியதாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலில் பதிவேற்றம் செய்த புகாரின்பேரில், ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டிருந்தார். மேலும், பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா, ராஜ் குந்த்ரா மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் மீது மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ரா, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியை 2-வது முறையாக கடந்த 2009-ல்8 திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக ராஜ்குந்த்ரா உள்ளார். இதை தவிர்த்து ஓட்டல்கள், தங்க வர்த்தகம், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் என பல்வேறு துறைகளில் அவர் வர்த்தகம் செய்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: