ஹோம் /நியூஸ் /இந்தியா /

வளர்ப்பு நாய்களுக்கு பாரம்பரிய முறையில் மேளாதளத்துடன் திருமணம்.. குருகிராமில் ருசிகரம்!

வளர்ப்பு நாய்களுக்கு பாரம்பரிய முறையில் மேளாதளத்துடன் திருமணம்.. குருகிராமில் ருசிகரம்!

செல்ல நாய்களுக்கு பாரம்பரிய முறையில் திருமணம்

செல்ல நாய்களுக்கு பாரம்பரிய முறையில் திருமணம்

அண்டை வீட்டினாரான சவிதாவும் மாணிதாவும் மனிதர்களைப் போலவே தங்கள் செல்ல நாய்களுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்ற யோசித்து இதை செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  ஆசையாக வளர்த்துவரும் செல்ல நாய்களுக்கு இரு குடும்பங்கள் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த சுவாரசிய சம்பவம் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஜீலே சிங் காலனியில் வசித்து வரும் இரு பெண்கள் மணிதா மற்றும் சவிதா. இருவரும் அண்டை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இதில் மணிதா என்ற பெண், ஆண் நாய் ஒன்றை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். அதற்கு ஷெரு என்று பெயர் வைத்துள்ளார்.

  அதேபோல், சவிதாவும் ஸ்வீட்டி என்ற பெயரில் பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்கள். இந்த இரு பெண்களும் மனிதர்களைப் போலவே தங்கள் செல்ல நாய்களுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று யோசித்து சுவாரசியமான செயல் ஒன்றை செய்துள்ளனர்.

  தாங்கள் வளர்க்கும் நாய்களையும் பெற்ற குழந்தைகளாக பாவித்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 100 திருமண அழைப்பிழகள் அடித்து அக்கம் பக்கத்தினரை திருமணத்திற்கு வர வேண்டும் என்று அழைத்துள்ளனர். பின்னர் திருமண சடங்குகளான ஹல்தி, பெஹ்ராஸ், மெஹந்தி ஆகியவற்றை நடத்தினர். பின்னர், மேளதாளம் முழங்க ஷேருவுக்கும் ஸ்வீட்டிக்கும் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளனர். அத்துடன் திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு விருந்து வைத்து ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த திருமணம் அனைவரையும் காண்போர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  இதையும் படிங்க: வாழும் தேவதை.. உடல் உறுப்பு தானத்தால் இருவருக்கு வாழ்வு கொடுத்த 18 மாத குழந்தை!

  இது குறித்து சவிதா கூறுகையில், நாங்கள் பாரம்பரிய முறைப்படி நான்கு நாள்கள் திருமண விழாக்களை செய்தோம். நாங்கள் இவ்வாறு திருமணங்களை செய்தால் போலீசார் கைது செய்வார்கள் பலர் எச்சரித்தனர். ஆனால் நாங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. எங்களுக்கு இது தான் உண்மையான சந்தோஷம் என்று குதுகலத்துடன் தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Dog, Gurugram, Marriage