Sherin Celin Death : காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஷெரினின் காதலன் தலைமறைவாகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிளாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ வின் உடல் கண்டறியப்பட்டது.
நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ வின் உடல் கொச்சி பாலாரிவட்டத்தில் உள்ள அவரது பிளாட்டில் இருந்து தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கொச்சி போலீசார் அவருடைய நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ஷெரின் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார் என்பதும் தனது இணையதள கணக்குகளிலும் மனவருத்தத்துடன் பல பதிவுகள் போட்டுள்ளார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவரது உடல் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை ஆய்வும் செய்யப்பட்டது. நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மன வருத்தத்தில் இருந்த ஷெரின் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரால் கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து இதுகுறித்து கொச்சி பாலேரி வட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களிடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில் ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஷெரினின் காதலன் தலைமறைவாகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பாலாரிவட்டம் போலீசார் தலைமறைவு ஆகியுள்ள ஷெரினின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.