துப்பாக்கி குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் ஷீலா தீக்சித் உடல் தகனம்!

அவரது உடலுக்கு பிரதமர் மோடி, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் நேற்று நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

துப்பாக்கி குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் ஷீலா தீக்சித் உடல் தகனம்!
ஷீலா தீக்சித்
  • News18
  • Last Updated: July 21, 2019, 8:07 PM IST
  • Share this:
டெல்லி மாநில மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் உடல் யமுனை ஆற்றின் கரை ஓரத்தில் தகனம் செய்யப்பட்டது.

உடல் நலக்குறைவின் காரணமாக சில நாள்களுக்கு முன்னர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும், டெல்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித், நேற்று மதியம் 4 மணி அளவில் உயிரிழந்தார்.

அரசு மரியாதையுடன் கொண்டு செல்லப்படும் ஷீலா தீக்சித்தின் உடல்அவரது உடல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பிரதமர் மோடி, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் நேற்று நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில், இன்று மதிய வேளையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நிகாம்போத் காட் இடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கே, துப்பாக்கி குண்டுகள் முழுங்க மாநில அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.Also see:

First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்