தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த ஷேக்தாவூத் மரைக்காயர்..!
தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த ஷேக்தாவூத் மரைக்காயர்..!
துப்புரவு பணியாளர்களுக்கு விருந்து
துபாய் நாட்டில் இருக்கும் ஷேக் தாவூத் மரைக்காயர் கடந்த ஒருமாத காலமாக நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
துபாய் நாட்டில் இருக்கும் நாகூரை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஷேக்தாவூத் மரைக்காயர் என்பவர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உழைப்பாளர்கள் தினம் மே 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பலரும் தொழிலாளர் தின வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் துபாய் நாட்டில் இருக்கும் நாகூரை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஷேக்தாவூத் மரைக்காயர் என்பவர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். இதற்காக நாகூரில் இருக்கும் தனது நண்பர்களை வைத்து விருந்துக்கான ஏற்பாடுகளை செய்த அவர், துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், என கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார்.
தனியார் பள்ளியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் நாகை நகராட்சி ஆணையர் யேசுராஜ் பிரியாணியை துப்புரவு பணியாளர்களுக்கு பரிமாற அனைவரும் மகிழ்ச்சி பொங்க உணவை உண்டு அங்கிருந்து சென்றனர்.
துபாய் நாட்டில் இருக்கும் ஷேக் தாவூத் மரைக்காயர் கடந்த ஒருமாத காலமாக நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் உழைப்பாளிகளை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக இந்த விருந்தை ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக தொடர்ந்து களப்பணியில் ஈடுபடும் அவர்களுக்கு யோகா பயிற்சியும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.