ராஜ்நாத் சிங்குக்கு எதிராக வீயூகம் வகுத்த எதிர்க்கட்சிகள்: லக்னோ தொகுதி கள நிலவரம்

2009-ம் ஆண்டு காசியாபாத் தொகுதியிலும், 2014-ம் ஆண்டு லக்னோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை வீழ்த்த வலிமையான வேட்பாளரைக் களமிறங்க வேண்டும் என்று சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி முடிவு செய்திருந்தது.

ராஜ்நாத் சிங்குக்கு எதிராக வீயூகம் வகுத்த எதிர்க்கட்சிகள்: லக்னோ தொகுதி கள நிலவரம்
பூனம் சின்ஹா
  • News18
  • Last Updated: April 16, 2019, 6:07 PM IST
  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடவுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராஜ்நாத் சிங் - உள்துறை அமைச்சர்அதற்காக, இன்று காலையில் அவரது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர், 2009-ம் ஆண்டு காசியாபாத் தொகுதியிலும், 2014-ம் ஆண்டு லக்னோ தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை வீழ்த்த வலிமையான வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்று சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி முடிவு செய்திருந்தது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.கவில் அதிருப்தியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்.பி சத்ருஹன் சின்ஹா அகிலேஷ் யாதவ்வைச் சந்தித்து, அவரது மனைவிக்கு சீட் கொடுக்கவேண்டும் என்று பேசினார். தற்போது சத்ருஹன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா, லக்னோ தொகுதியில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். லக்னோவில் காயஸ்தா பிரிவைச் சேர்ந்த நான்கு லட்சம் வாக்காளர்களும், 1.3 லட்சம் சிந்தி பிரிவைச் சேர்ந்த வாக்காளர்களும் உள்ளனர்.

அதைத் தவிர்த்து 3.5 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்களும் உள்ளனர். பூனம் சின்ஹா, சிந்தி பிரிவைச் சேர்ந்தவர். அவரது கணவர் சத்ருஹன் சின்ஹா, காயஸ்தா பிரிவைச் சேர்ந்தவர். அதனால், பூனம் சின்ஹா வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாமல், பூனம் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தெரிகிறது. ஏப்ரல் 18-ம் தேதி பூனம் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்