மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக, எதிர்கட்சிகளின் சார்பாக சத்ருஹன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், தேசிய, மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து வலிமையான வேட்பாளரைக் களமிறங்க எதிர்கட்சிகள் திட்டமிருந்தன. பா.ஜ.கவிலிருந்து மூத்த தலைவரும் நடிகருமான சத்ருஹன் சின்ஹா அதிருத்தியின் காரணமாக, அக்கட்சியிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இந்த நிலையில், லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக சத்ருஹன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா எதிர்கட்சிகளின் சார்பாக களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து தெரிவித்த கட்சி வட்டாரங்கள், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக பூனம் சின்ஹா போட்டியிடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கும்போது, ‘பூனம் சின்ஹாவுக்கு ஆதரவளிக்கும் வகையில், லக்னோவில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த சமாஜ்வாடி நிர்வாகி ஒருவர், ‘லக்னோவில் 1.3 லட்சம் சிந்தி வாக்காளர்கள் உள்ளனர். காயாஸ்தா பிரிவைச் சேர்ந்த 4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அதைத் தவிர 3.5 லட்சம் முஸ்லீம்கள் உள்ளனர். பூனம் சின்ஹா, சிந்தி பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய கணவர் சத்ருஹன் சின்ஹாவைச் சேர்ந்தார். எனவே, அவரை வாக்காளர்களை நிறுத்தவாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார்.
ஐ.பி.எல் விவரங்கள்:
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.