ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்.. தேர்தல் பரப்புரையை தொடங்கிய சசி தரூர் கருத்து!

புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்.. தேர்தல் பரப்புரையை தொடங்கிய சசி தரூர் கருத்து!

கட்சி தலைவர் தேர்தல் பரப்புரையில் சசி தரூர்

கட்சி தலைவர் தேர்தல் பரப்புரையில் சசி தரூர்

புதிதாக தேர்வாகும் காங்கிரஸ் தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட மாட்டார் என தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagpur, India

  காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தொடங்கினார். நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமி என்ற பகுதியில் சசி தரூர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி  செய்தியாளர்களிடம் சந்தித்தார்.

  அப்போது சசி தரூர் பேசுகையில், "நான் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கியுள்ளேன். கட்சியின் பல தொண்டர்கள் மாற்றத்தை விரும்பி என்னை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினார்கள். நான் இளைய தலைமுறையின் குரலாக ஒலிக்க விரும்புகிறேன். நான் மூத்த தலைவர்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் இது இளைஞர்களின் பேச்சை கேட்க வேண்டிய நேரமாகும். கட்சியின் அமைப்பில் மாற்றத்தை கொண்டுவந்து கட்சி தொண்டர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

  கார்கே போன்ற மூத்த தலைவருக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு கிடைக்கலாம். ஆனால், எனக்கு பல மாநிலங்களில் தொண்டர்களின் ஆதரவு உள்ளது. நான் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகிய மூவரையும் சந்தித்தேன். அவர்கள் தேர்தல் நியாமான முறையில் நடக்கவே விரும்புகிறார்கள். புதிதாக தேர்வாகபோகும் காங்கிரஸ் தலைவர் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக இருக்கமாட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வியூகம் அமைத்து பாஜகவை எதிர்க்க வேண்டும்" என்றார்.

  இதையும் படிங்க: மேடையில் மக்கள் முன் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - காரணம் என்ன?

  காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. சசி தரூரும், மல்லகார்ஜுன கார்கேவும் போட்டியாளர்களாக களமிறங்கும் நிலையில், சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவு கார்கே பக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, கார்கேவுக்கு தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது. கட்சி தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Congress, Shashi tharoor, Sonia Gandhi