மக்களவை காங். தலைவர் பதவியை ஏற்க தயார்: சசிதரூர்

திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட சசி தரூர், மூன்றாவது முறையாக வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வது குறிப்பிடத்தக்கது.

Tamilarasu J | news18
Updated: May 28, 2019, 4:02 PM IST
மக்களவை காங். தலைவர் பதவியை ஏற்க தயார்: சசிதரூர்
காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.
Tamilarasu J | news18
Updated: May 28, 2019, 4:02 PM IST
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகிக்க தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் படுதோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி முனைப்பாக உள்ளார்.


மேலும் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்பாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், தான் எந்தப் பதவியையும் ஏற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட சசி தரூர், மூன்றாவது முறையாக வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வது குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் பார்க்க:
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...