பிரேக்கை சரிசெய்ய முடியவில்லை, அதனால் ஹாரன் சத்தத்தை பெரிசா வச்சுருக்கேன்: பாஜக-வை சசி தரூர் சரமாரி கிண்டல்

சசி தரூர்.

எதிர்க்கட்சிகள் மக்களவையில் பாஜகவை விமர்சித்து வருகின்றன. ப.சிதம்பரம் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் தன் விமர்சனங்களை வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தடைகளை நீக்குவதற்குப் பதிலாக அறிவிப்புகளை பெரிதாகப் பேசி வருகிறது பாஜக என்பதாக சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.

  மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் மக்களவையில் அளித்து வருகிறார். பல்வேறு புதிய திட்டங்களை அவர் அதில் அறிவித்துள்ளதோடு, ஏற்கெனவே இருக்கும் நலத்திட்டங்களுக்கு கூடுதல் தொகையையும் ஒதுக்கியுள்ளார்.

  அதே போல் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

  ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களவையில் பாஜகவை விமர்சித்து வருகின்றன. ப.சிதம்பரம் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் தன் விமர்சனங்களை வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “சிறு மற்றும் குறு நடுத்தர தொழில்கள், விவசாயிகள், தொழிலாளர்களை ஆதரித்து வேலை வாய்ப்பை உருவாக்குங்கள். உயிரைக் காக்க சுகாதாரம் ஆரோக்கியத்துக்கு அதிக நிதி ஒதுக்குங்கள், எல்லைகளைப் பாதுகாக்க ராணுவச் செலவினங்களைக் கூட்டுங்கள்” என்று ட்வீட் செய்ததை சசி தரூர் பகிர்ந்துள்ளார்.

  இந்நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தடைகளை நீக்குவதற்குப் பதிலாக அறிவிப்புகளை பெரிதாகப் பேசி வருகிறது பாஜக என்பதாக சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.

  மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை விமர்சிக்கும் போது, “நான் உங்கள் வாகன பிரேக்குகளை சரி செய்ய முடியவில்லை. அதனால் உங்கள் வாகனத்தின் ஹாரனை இன்னும் சத்தம் கூட்டியுள்ளேன் என்று கூறும் கேர்ஜ் மெக்கானிக்கை எனக்கு நினைவூட்டுகிறது இந்த பாஜக அரசு” என்று கேலி செய்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: