Home /News /national /

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியே விருதை பெற்றார் சசி தரூர்

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியே விருதை பெற்றார் சசி தரூர்

சசி தரூருக்கு செவாலியே விருது

சசி தரூருக்கு செவாலியே விருது

பல்வேறு நாவல்கள், வரலாற்று நூல்கள், கட்டுரை தொகுப்புகளை எழுதியுள்ள சசி தரூர் சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் உயரிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. சசி தரூரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டின் தூதர் இமானுவேல் லெனின் தெரிவித்துள்ளார்.

    தன்னை கௌரவித்த பிரான்ஸ் நாட்டு அரசுக்கு ட்விட்ட்ரில் நன்றி தெரிவித்துள்ள சசி தரூர், பிரான்ஸ் நாட்டுடன் உறவு, மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன் நான். எனக்கு இந்த உயரிய விருது கொடுத்ததற்கு நன்றி என சசி தரூர் கூறியுள்ளார்.


    சசி தரூருக்கு இந்த விருது கிடைத்தற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து செய்தியில், சசி தரூருக்கு விருது கிடைத்த செய்தியை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்துள்ளேன். எனது சகாவான சசி தரூர் தன்னுடைய மிக சிறந்த அறிவு புலமை காரணமாக இந்த உயரிய விருதை பெற்றுள்ளார் என வாழ்த்தியுள்ளார். மேலும், கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: நாட்டின் 14 ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தங்கர் பதவியேற்றார்

    66 வயதான சசி தரூர் மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட. பல்வேறு நாவல்கள், வரலாற்று நூல்கள், கட்டுரை தொகுப்புகளை எழுதியுள்ள சசி தரூர் சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் உயரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு ஸ்பெயின் நாட்டு அரசும் அந்நாட்டின் மிக உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: France, Shashi tharoor

    அடுத்த செய்தி