காங்கிரஸ் எம்பி சசிதரூர் நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்களுடன் எடுத்த செல்பி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதிய செல்பி ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி, திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடன் செல்பி எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது சமூக ஊடக பக்கத்திலும் அவர் பதிவேற்றினார். மக்களவை வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் கூறுகிறார்கள்? இன்று காலை எனது ஆறு சக எம்.பி.க்களுடன் என்று அவர் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, முழு செல்ஃபி விஷயமும் (பெண் எம்.பி.க்களின் முயற்சியில்) நல்ல நகைச்சுவையுடன் செய்யப்பட்டது & அதே உணர்வில் அதை ட்வீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள். சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன் என்று சசிதரூர் விளக்கமளித்தார்.
இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று, ஆண் எம்.பி.க்களுடன் எடுத்த செல்பி ஒன்றை சசதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அதிக தோழமையுடன் என்றும் இந்த புகைப்படம் அதிக வைரலாவதை யாரும் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எந்த ரத்த வகைகளை கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம்? ஆய்வில் தகவல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parliament, Selfie, Shashi tharoor