டெல்லி காற்று மாசுபாடு! தலைநகரத்தை சிகரெட்டுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்த காங்கிரஸ் எம்.பி
டெல்லி காற்று மாசுபாடு! தலைநகரத்தை சிகரெட்டுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்த காங்கிரஸ் எம்.பி
மாதிரிப் படம்
டெல்லி (Delhi) மற்றும் தலைநகர்ப் பகுதிகளில் காற்று மாசு மோசமடைந்துள்ள (Air Pollution) காரணத்தினால், உச்ச நீதிமன்றம் பொது சுகாதார அவசரநிலையை (public health emergency) பிரகடனம் செய்துள்ளது.
டெல்லி உடல் நலத்துக்கு கேடானது என்று காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பதிவிட்டுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து டெல்லி (Delhi) மற்றும் தலைநகர்ப் பகுதிகளில் காற்று மாசு மோசமடைந்துள்ள (Air Pollution) காரணத்தினால், உச்ச நீதிமன்றம் பொது சுகாதார அவசரநிலையை (public health emergency) பிரகடனம் செய்துள்ளது. இதன் காரணமாக வரும் நவம்பர் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் நிலவும் இந்த நிலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. டெல்லியின் நிலை குறித்து நெட்டீசன்கள் பலரும் கேலி செய்துவருகின்றனர்.
டெல்லியின் நிலை குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் மூத்த தலைவருமான சசி தரூர் கேலி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகிவருகிறது.
அவருடைய பதிவில், ‘எத்தனை நாள்களுக்கு சிகரெட், பீடி குடித்து உங்கள் வாழ்நாளை குறைத்துக் கொள்வீர்கள்? உண்மையில் உங்கள் வாழ்நாளைக் குறைக்க வேண்டுமென்றால் டெல்லி வாருங்கள்..!’ என்று டெல்லி சுற்றுலாத்துறை கூறுவதுபோல பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில், டெல்லி உடல் நலத்துக்கு கேடானது என்று பதிவிட்டு சிகரெட் அட்டைப் பெட்டிக்குள் டெல்லியை அடையாளப்படுத்தும் குதுப்மினார் தூண் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். டெல்லியின் நிலையை நெட்டீசன்கள் பலரும் ட்ரோல் செய்துவருகின்றனர்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.