மனைவி மரண வழக்கு: சசி தரூர் விடுவிப்பு!

கோப்புப் படம்

tவழக்கில் இருந்து தான் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பை கேட்டதும் நீதிபதிக்கு நன்றி தெரிவித்த சசி தரூர், கடந்த ஏழரை ஆண்டுகளாக வேதனையை அனுபவித்து வந்ததாக குறிப்பிட்டார்

 • Share this:
  சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி.  சசி தரூரை  விடுவித்து  டெல்லி சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்.  டெல்லியின் சானக்யபுரியில் உள்ள லீலா என்ற சொகுசு ஹோட்டலில், 2014 ஜனவரி 17ம் தேதி சுனந்தா புஷ்கரின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.   சுனந்தா புஷ்கரை அவரது கணவர் சசி தரூர்தான் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்திய தண்டனைச் சட்டம் 498-ஏ, 306 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பு தேதியை ஏப்ரல் 12ம் தேதி நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில்,   இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

  இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவாரா பிவி நாகரத்னா?


  சசி தரூர் விடுதலை

  இந்த வழக்கில் இருந்து  சசி தரூர் விடுதலை செய்யப்படுவதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி  கீதாஞ்சலி கோயல் தெரிவித்தார். தீர்ப்பின்போது சசிதரூர் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி இருந்தார்.  தீர்ப்பை கேட்டதும் நீதிபதிக்கு நன்றி தெரிவித்த சசி தரூர், கடந்த ஏழரை ஆண்டுகளாக வேதனையை அனுபவித்து வந்ததாக குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க: கருவை கலைக்க பெண்களுக்கு உரிமையுண்டு: கேரள உயர் நீதிமன்றம்!

  Published by:Murugesh M
  First published: