ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டை வெளிப்படையாக மிரட்டுவதை இப்போதுதான் பார்க்கிறேன் - சசி தரூர் அதிருப்தி

ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டை வெளிப்படையாக மிரட்டுவதை இப்போதுதான் பார்க்கிறேன் - சசி தரூர் அதிருப்தி
சசி தரூர்
  • Share this:
ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டை வெளிப்படையாக மிரட்டுவதை நான் இப்போதுதான் பார்க்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் கடுமையாகப் பாதித்துள்ள கொரோனா வைரஸைக் கட்டப்படுத்த இந்திய அரசு ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துகிறது. கொரோனா பாதிப்பு இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் முடிவு செய்துள்ளன. அதனால், இந்தியாவிடம் இந்த மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லி கேட்டுவந்தனர்.

இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்திருந்தது. இந்தநிலையில், இன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியா எங்களுக்கு இறக்குமதி செய்யவேண்டும் என்று மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்தியா எங்களுக்கு தரவில்லையென்றால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும்’ என்று பேசியிருந்தார். இந்த விவகாரம் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


 இதுகுறித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய இத்தனை ஆண்டு கால உலக அரசியல் அனுபவத்தில் எந்த நாட்டின் தலைவரும் மற்றொரு நாட்டை மிரட்டி நான் கேட்டதில்லை. எந்த அர்த்தத்தில் தங்களுடைய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சப்ளை என்கிறீர்கள் ட்ரம்ப். இந்தியா, அந்த மருந்தை உங்களுக்கு தரலாம் என்று முடிவு செய்யப்பட்டப்பிறகு அது உங்களுடைய சப்ளை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading