பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர் சசி தரூர்!

சசி தரூர்

வங்கதேச சுதந்திர போராட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் உரையை முழுமையாக பார்க்காமல் விமர்சித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

  • Share this:
வங்கதேசத்தின் 50வது சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக வங்கதேசம் சென்று திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி.

வங்கதேச தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய இந்திய ராணுவத்தினருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். எனக்கு 20 - 22 வயது இருக்கும் என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு சென்றேன். வங்கதேசத்தில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்கள் நன்கு தெரியும். அந்த புகைப்படங்களால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை” என பேசியிருந்தார்.

வங்கதேசத்தில் பிரதமர் மோடி


பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்து விமர்சனம் செய்து ட்வீட் வெளியிட்ட திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் “சர்வதேச கல்வி: நமது பிரதமர் வங்கதேசத்துக்கு இந்திய 'போலி செய்திகளை' பற்றி கூறுகிறார். அபத்தமானது என்னவென்றால், வங்கதேசக்கு விடுதலை வாங்கித்தந்தவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என வெள்ளிக்கிழமை இரவு பதிவிட்டிருந்தார்.இருப்பினும் நேற்று தனது ட்வீட்டுக்காக மன்னிப்பு கோரியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் தவறு செய்யும்போது அதை ஒப்புக்கொள்வதை பற்றி எனக்கு கவலையில்லை. செய்திகளின் தலைப்பு மற்றும் சில ட்வீட்களை பார்த்துவிட்டு, வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த இந்திரா காந்தியின் பெயரை பிரதமர் மோடி குறிப்பிடவில்லை என்று நினைத்து அப்படி ஒரு ட்வீட்டை பதிவிட்டுவிட்டேன். ஆனால் மோடி, இந்திரா காந்தியின் பங்களிப்பு குறித்து பேசியிருக்கிறார், மன்னித்துவிடுங்கள்!” என சசி தரூர் விளக்கம் அளித்திருக்கிறார்.பிரதமர் மோடி தனது உரையில், வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பங்களிப்பு அனைவரும் அறிந்ததே என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: