கேரளாவை பாடாய்ப்படுத்திய ஓணம்.. ஒரே நாளில் மேலும் 7,000 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா

சமீபத்தில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தான் கேரளாவில் நோய்த்தொற்று அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

  • Share this:
கேரளாவில் நேற்றைய தினம் 24,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 31,000 ஆக அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுவதாக உள்ளது.

கொரானா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 31,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பாதிப்பு எண்ணிக்கை 24,000 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 7,0000 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 30% பாதிப்பு அதிகரித்திருக்கிறது.

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 311,445 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,83,429 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 215 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை முடிந்து 20,271 பேர் குணமடைந்துள்ளனர். பரிசோதனை செய்யப்படுவோரில் 19.03 சதவீதத்தினருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

Also Read: பாம்புகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட முயன்றவருக்கு நேர்ந்த சோகம் – வீடியோ!

சமீபத்தில் நடைபெற்ற ஒனம் பண்டிகை கொண்டாட்டங்கள் தான் கேரளாவில் நோய்த்தொற்று அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை ஓனம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், அடுத்த சில வாரங்கள் கேரளாவுக்கு சோதனையான காலகட்டம் ஆகும். ஓனம் பண்டிகை ஷாப்பிங்கில் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதால் எதிர்வரும் நாட்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளாவில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 4,048 பேரும், திருச்சூரில் 3,865 பேரும், கோழிகோட்டில் 3,680 பேரும், மலப்புரத்தில் 3,502 பேரும், பாலக்காட்டில் 2562 பேரும், கொல்லத்தில் 2479 பேரும், கோட்டயத்தில் 2050 பேரும், கன்னூரில் 1930 பேரும், ஆழப்புழாவில் 1874 பேரும், திருவனந்தபுரம் 1700 பேரும், இடுக்கி, பத்தனம்திட்டாவில் சுமார் 1000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Arun
First published: