ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் வந்த இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இன்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்டிகோ 6E-1406 விமானம் இன்று ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் வந்து கொண்டிருந்தது. பயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்து, விமானத்தை அவரசமாக தரையிறக்க கோரினார். இதையடுத்து விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கராச்சியில் சிக்கியுள்ள பயணிகள் மாற்று விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானம் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் ஷார்ஜாிவில் இருந்து புறப்பட்டுள்ளது. நான்கு மணி நேர பயணத்தில் அது ஹைதராபாத் வந்தடைய வேண்டும். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை காரணம் காட்டி நள்ளிரவு 2.15 மணிக்கு கராச்சியில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாகவே இந்தியாவில் பல்வேறு விமானங்கள் பயணத்தின் போது தொழில்நுட்ப கோளாறுக்கு ஆளாகும் சம்பவம் அதிகம் காணப்படுகிறது.
குறிப்பாக ஸ்பைஸ்ஜெட், இன்டிகோ ஆகிய விமானங்களில் இந்த கோளாறுகள் ஏற்படுகின்றன.கடந்த ஜூலை 14ஆம் தேதி டெல்லியில் இருந்து வதோதரா சென்ற இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெய்பூரில் தரையிறக்கப்பட்டது. ஜூலை 5ஆம் தேதி 160 பயணிகளுடன் டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
இதையும் படிங்க: தொலைக்காட்சி தொடரால் விபரீதம்: 7 வயது சிறுவன் கடத்தி கொலை.. 5 சிறுவர்கள் கைது!
தற்போது ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்திய விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indigo, Indigo Air Service, Karachi